சொந்தமாக தொழில் தொடங்குவது தவறில்லை ஆனால் அடுத்தவர்கள் வயிற்றில் அடிக்குமாறு தான் இன்று பெரும்பாலான தொழில்கள் நடக்கின்றன. ஆமாங்க இப்போல்லாம் யாரும் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போகணும்னு நினைக்குறதைவிட எதாவது தொழில் செஞ்சு சம்பாதிக்கலாம்னு முடிவு பண்ணி இறங்கிறாங்க. ஆனா எல்லாரும் தொழில் ஆரம்பிச்சுட்டா வாடிகையாளர்தான் யாரு. அதுமட்டும் இல்ல இங்க தொழில் ஆரம்பிக்கிறோம்னு துரோகம் தான் நடக்குது.



உதாரணத்துக்கு எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் படிச்சு முடிச்சுட்டு போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிக்கப்போறேன் அப்புடின்னு சொன்னான்,நானும் சரி அவனோட தொழில் துவக்கத்துக்கு உதவலாமே அப்புடின்னு என்னோட கைல இருந்து கொஞ்சம் செலவு பண்ணி அவனுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி குடுத்தேன் . அவனோட கூட இருந்து கொஞ்ச நாள் உதவலாம்னு இருந்தப்போ தெரிஞ்சது இங்க நாம ஒன்லைன் ல கலர் கலர் ஆஹ் விளம்பரம் குடித்து கிப்ட் பிரேம் 600,700 , 2000 ன்னு செலவு பண்ணி ஆர்டர் பண்ணுறோமே அது எல்லாமே தயார் செய்ய ஆகுற செலவு வெறும் 50 ரூபாய் அடக்கம் தான் . இதுல இப்படி ஒரு லாபமா அப்புடின்னு வியந்து போனென் ஆனா இங்க ஒரு தனி மனித லாபம் எதனை பேரோட நஷ்டமா இருக்குனு யாருக்கும் தெரியாது.



இந்த மாதிரி அதிக லாபம் குடுத்து விக்கிற பொருளை வாங்குற எல்லாரும் பணக்காரங்க இல்ல அது மட்டும் இல்ல நெறையா பெரு தனக்கு பிடிச்ச மற்றும் தேவையான பொருளை மற்றவர் லாபதிக்காக தன்னோட உண்மையான உழைப்பை அடமானம் வச்சு வாங்குறாங்க. இவர்கள் நாட்டிற்கும் வரி செலுத்துவதில்லை பெரும்பாலும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இனிமேலும் இது தவிர்க்க பட வேண்டும்.....